தமிழ் வளர்ச்சி

முகப்பு Home       பின் செல்

தமிழ் வளர்ச்சி என்பது மொழி வளர்ச்சியைக் குறிப்பிடுவது அல்ல. தமிழ் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே வளர்ச்சி அடைந்து முழுமை பெற்ற ஒரு மொழி. தமிழ் மொழியின் பயன்பாட்டை முழுமைப்படுத்தவதே தமிழ் வளர்ச்சி.  தமிழ் வளர்ச்சிப்பணி யாதெனின்;-

  1. மாறிவரும் உலகுக்கும் அறிவியல் வளர்ச்சிக்கும் ஏற்ப தமிழ் கலைச்சொற்களை உருவாக்குவது.
  2. உலக இலக்கிய போக்கிற்கு ஏற்ப தமிழ் இலக்கியங்களைப் படைப்பது.
  3. அரசு, நீதித்துறை, கல்வி, அறிவியல் ஆகியவற்றில் தமிழை முழுமையாகப் பயன்படுத்துவது.
  4. அதற்கு தேவைப்படும் கலைச்சொற்களை தொல்காப்பிய விதிகளுக்குட்பட்டு உறுவாக்கி அகராதியில் ஏற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வருதல்.
  5. சங்க இலக்கியத்தில் உள்ள சொல்வளம் முழுவதையும் இன்றையப் பயன்பாட்டிற்கு கொண்டுவருதல்.
  6. வட்டாரவழக்கில் பிறமொழி ஆதிக்கத்தால் சிதையுண்ட சொற்களை சரிசெய்தல்.
  7. வட்டாரவழக்கில் உள்ள சொல்வளம் அழியாமல் பாதுகாத்து அகராதியில் ஏற்றி புழக்கத்திலிருந்தும் அழியாமல் பாதுகாத்தல்
  8. வட்டாரவழக்கின் பேச்சிசை – அதாவது பேச்சி வழக்கிலுள்ள இசைப் பதங்களின் ஏற்ற இறக்கங்கள் வழக்கொழியாமல் பாதுகாத்தல்.
  9. வழிபாட்டு மொழியாக தமிழகத்தில் தமிழை முதன்மைப் படுத்துதல்
  10. பிள்ளைகளுக்கு பெயர் வைப்பதில் சமஸ்கிருதத்தை அறவே நீக்கி தூய தமிழ் பெயர்களை வைப்பதை ஊக்குவித்து செயல்படுத்துதல்.
  11. தமிழ் பெயர்களாக இருந்து பின்னர் மாற்றம் பெற்ற ஊர் பெயர்களை திரும்ப பழைய தமிழ் பெயர்களாகவே மாற்றுதல்.
  12. தொழில் நிறுவனங்கள் மற்றும் பள்ளிக் கூடங்களுக்கு தமிழில் பெயர் வைப்பதை ஊக்குவித்தல்.
  13. தமிழ் திரைப்படங்கள் பெயர்கள் தமிழில் மட்டுமே வைக்க ஊக்குவித்தல்.
  14. தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்படும் குடியிருப்புப் பகுதிகளுக்கு, சாலைகளுக்கு, தெருக்களுக்கு தமிழ் பெயர்கள் வைப்பதை கட்டாயமாக்குதல்

போன்றவையே தமிழ் வளர்ச்சிப் பணிகள் என்று கொள்க.

முகப்பு Home   பின் செல்