முன்னுரை

முகப்பு Home       பின் செல்

முன்னுரை

இன அழிப்புக்கு எதிராகவும், இன ஒடுக்குமுறைக்கு எதிராகவும் குரல் கொடுக்க கூட நாதியற்ற ஒரு இனமாக தமிழினம் இன்று இருப்பதை உணரக்கூடிய எவருக்கும் தமிழன் உணர்வற்றும் ஒற்றுமையின்றியும் இருப்பதே அதற்கு காரணம் என்பது தெரியும்தமிழன்  ஒன்றுபட பாடுபடும் இன உணர்வாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களில் மிக முக்கியமானது யார் தமிழன் என்று எப்படி வரையறை செய்வது என்பதுதான்ஈழப்போர் முடிவுக்குப் பின் தமிழகத்தில் எழுந்த உணர்வலைகள் தணிக்கப்பட்டதே யார் தமிழன் எனும் கேள்வியை அடிப்படையாகக் கொண்டுதான்.  தமிழருள் தமிழுணர்வு கொண்ட பிற மொழி இனத்தவரும் கலந்து இணக்கத்துடன் வாழ்வதால் அந்த பேரிழப்பின் வலியை அனைவரும் உணர்ந்தார்கள், ஆனால் வலியின் தீவிரம் வேறு வேறாக இருந்ததை முதல் முறையாக தமிழினத்தில் பிறந்த தமிழன் உணர்ந்தான்.  தமிழினத்தில் பிறந்த தமிழன் உயிரையும் மாய்க்க தயாராக இருந்த நிலையில் தமிழனுடன் கலந்து வாழும் பிற மொழியினத்தவர் அனுதாபப்பட வேண்டிய இழப்பாக பார்த்தார்களேத் தவிர வேறு எதையும் அதற்காக இழந்து விட தயாராக இல்லை.  தமிழன் தான் தமிழனை ஆள வேண்டும் எனும் எண்ணம் தமிழனுள் எழுந்ததும் அந்த தருணத்தில் தான்.   தமிழனுடன் திராவிடன் எனும் அடையாளத்துடன் இணக்கத்துடன் வாழும் பிற மொழியினத்தவர் அந்த உணர்வலைக்குள் ஊடுருவி அதை மடைமாற்றி கொண்டு செல்வதை நம்மால் காண முடிந்தது.  தமிழனுடன் இணக்கமாக வாழும் பிற மொழியினத்தவருக்கு அது வெறும் வலியே.  ஆனால் தமிழனுக்கு மட்டுமே அது கடந்து செல்ல முடியாத பேரிழப்பு.  யாரெல்லாம் தமிழர் எனும் தேடல் தீவிரமடைந்ததும் அந்த தருணத்திலிருந்துதான்.

தமிழ் மண்ணிற்கு பங்கம் ஏற்பட்டால் அல்லது தமிழன் இன அழிப்புக்கு உள்ளானால் தமிழன் உயிரைக் கொடுத்து போராடுவான்.  தமிழனோடு நல்லிணக்கத்துடன் வாழும் திராவிட மரபினத்தைச் சேர்ந்த மாற்று மொழியின உடன்பிறப்புகள் அனுதாபப்படுவார்கள், ஆறுதல் சொல்வார்கள், உடன் நிற்பார்கள், ஆனால் அதற்கு மேல் அவர்களிடமிருந்து எதிர்பார்ப்பது இயலாகாது.  அதனால் யாரெல்லாம் தமிழன், யாரெல்லாம் தமிழன் உடன் நிற்கும் தமிழுணர்வு கொண்ட திராவிட மரபினத்தைச் சேர்ந்த மாற்று மொழியின உடன்பிறப்புகள், யாரெல்லாம் தமிழர் அடையாளங்களை சிதைக்கும் நோக்கை உள்வைத்து கொண்டு தமிழர் எனும் போர்வையில் உள்ளனர் என்று பிரித்து இனம் காண தமிழின உணர்வாளர்கள் முற்படுகிறோம்.  ஆனால் ‘யார் தமிழன்’ எனும் கேள்விக்கு ஒவ்வொரு தமிழினத்தில் பிறந்த தலைவரும் உணர்வாளரும் வெவ்வேறு விளக்கங்களும் வெவ்வேறு வரையுரையும் தருவதால் தமிழ் மக்கள் குழப்பம் அடைந்து மிக எளிதில் தமிழின நலனுக்கு எதிரானவர்களின் சூழ்ச்சிக்கு பலியாகி தமிழன் எனும் அடையாளத்திற்கு மாற்று அடையாளங்களைத் தாங்கிப் பிடித்தவர்களாக உள்ளனர்.

தமிழினத்தின் குரல் உலக அரங்கில் கேட்க வேண்டும் என்றால் அனைத்து தமிழனும் ஒரே குரலை எழுப்பவேண்டும்அதற்கு அவன் கொண்டுள்ள அனைத்து அடையாளத்திற்கும் மேலாக அவன் தமிழன் என்பதை அவன் உணரவேண்டும்ஒருவன் ஒரே நேரத்தில் பல அடையாளங்களுடன் இருக்க முடியும்நான் ஒரு இந்தியன், மரபினத்தால் திராவிடன்இவை எல்லாவற்றிற்கும் மேலாக நான் ஒரு தமிழன்இப்படி, எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அந்த நாட்டின் மீது கொண்டுள்ள நாட்டுப்பற்றில் சற்றும் குறைவில்லாமல் அந்தந்த நாட்டின் குடிமகன் எனும் அடையாளத்தைத் தாங்கிப் பிடித்து அதற்கு ஆற்றவேண்டிய கடமையை செம்மையுடன் ஆற்றி தமிழன்எனும் அடையாளத்தை எல்லாவற்றிற்கும் மேலாக தூக்கிப்பிடித்து தலைநிமிர்ந்து வாழமுடியம்  என்பதை ஒவ்வொரு பாமர தமிழனும், விலைபோனத் தமிழனும், எதிரிகளின் சூழ்ச்சிக்குப் இரையான தமிழனும் உணரும் வகை செய்ய வேண்டும்அதற்கு முதலில் யார் தமிழன், யாரெல்லாம் தமிழன் என்பதை வரையறுக்க வேண்டும்.

யார் தமிழன் என்பதை வரையறுப்பது சிக்கலான ஒன்றுஅந்த சிக்கலின் காரணமாகத்தான் ஒவ்வொரு தமிழ் உணர்வாளரும் தமிழ் தேசிய சித்தாந்த தலைவர்களும் வெவ்வேறு நிலைப்பாடு எடுக்கிறார்கள்ஊடகங்கள் ஒவ்வொரு முறை யார் தமிழர் எனும் கேள்வியை எழுப்பும்போதும் வெவ்வேறு பதிலைக்கூறி சமாளிக்க வேண்டிய நிலை வருகிறதுஇப்படி சமாளிப்பது யார் தமிழன் என்று தெரியாமல் இருப்பதால் அல்லநாம் ஒவ்வொருவருக்கும் மட்டுமல்லாமல் அந்த கேள்வியை எழுப்புபவருக்கும் யார் தமிழன் என்று நன்றாகத் தெரியும்ஆனால் யார் தமிழன் எனும் வரையுரையின் வரைவட்டம் சரியாக வரையறுக்கப்படாததால், அல்லது தமிழருள் ஒருமித்த கருத்து இல்லாததால் அதைப் பயன்படுத்தி தமிழின நலனுக்கு எதிரானவர்கள் மிகச்சுலபமாக பாமரத் தமிழனைக் குழப்பி வேறு அடையாளங்களை முன்னிருத்தி தமிழன் எனும் பேரடையளத்தால் ஒன்றுபடாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

யார் தமிழன் என்று வரையறுப்பதில் உள்ள சிக்கல்கள்:

சென்ற நூற்றாண்டில் பிறந்த மக்கள் நன்கு அறிந்த உண்மை என்னவென்றால் தமிழுணர்வும் தமிழின உணர்வும் சுதந்திர போராட்டத்தால் ஏற்பட்ட இந்திய தேசிய உணர்வையும் மீறி ஒரு நூற்றாண்டு காக்கப்பட்டது திராவிட இயக்கம் அரசியல் ஆதிக்கம் கொண்ட காலகட்டத்தில்தான்தந்தைப் பெரியார் உட்பட பல திராவிட இயக்கத் தலைவர்கள் வேறு மொழியைத் தாய்மொழியாக கொண்டவர்கள் என்பதால் அவர்கள் தமிழர்களுக்கு ஆற்றியத் தொண்டிற்காக தமிழன் நன்றியுணர்வுடன் அவர்களைப் பார்க்கிறான்தமிழ் உணர்வை திராவிட இயக்கத் தலைவர்கள் ஒரு அரசியல் இயக்கமாக மாற்றினார்கள்அவர்களில் சிலர் வேறு திராவிட மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் தமிழுணர்வை விதைத்தார்கள்தமிழ் இன உணர்வை காத்தார்க்ளஅதனால் தமிழுணர்வும் தமிழ் இன உணர்வும் கொள்ள தாய்மொழித் தமிழாக இருக்க வேண்டும் எனும் தேவையில்லையோ எனும் கேள்வியும் குழப்பமும் தமிழனுக்கு ஏற்படுகிறதுசில நூற்றாண்டுகளாக தமிழகத்தில் வாழும் சில மாற்று மொழியினத்தவர் தமிழ் மொழி மீது கொண்டுள்ள பற்றும் ஈழ விடுதலையில் அவர்கள் காட்டும் முனைப்பும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களை விட சற்றும் சளைத்தவை இல்லை என்பதையும் நாம் காண முடிகிறதுஅப்பொழுது அவர்கள் யார் அவர்களும் தமிழர்கள்தானே எனும் கேள்வி பாமரனுக்கு மட்டும் இன்றி தலைவர்களுக்கும் எழுகிறதுஅவர்களை தமிழர்கள் என்று அங்கீகரித்தால் அதே மொழியைச் சார்ந்த மற்றவர்கள் தமிழுக்கும் ஈழ விடுதலைக்கும் எதிரானவர்களாகவும் உள்ளார்கள்.   இந்தி, சமஸ்கிருத ஆதிக்கத்தை எதிர்த்து எழுந்த உணர்வலைகளில் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட மக்கள் சிலர் மொழி உணர்வு, இன உணர்வு அற்று அதை ஆதரிக்கும் நிலைப்பாடும், அதே நேரத்தில் பிற திராவிட மொழியினத்தைச் சார்ந்த சிலர் தமிழைக் காக்க நடத்திய போராட்டங்களும் நாம் அறிந்ததேதமிழ் குடியில் பிறப்பதனால் ஒருவனைத் தமிழன் என்பதா அல்லது தமிழனாக பிறக்காவிடினும் தமிழைக் காக்க போராடிய தமிழை முதல் மொழியாகக் கொண்டு தமிழகத்தில் பல தலைமுறைகளாக வாழும் பிற மொழியினத்தைச் சார்ந்தவரையும் தமிழனாக ஏற்பதா எனும் குழப்பம் உள்ளது.

தமிழ் குடியில் பிறந்த ஒருவன் இன்று தமிழுணர்வு இல்லாமல் இருந்தாலும் அவனோ அவனது வாரிசுகளோ தான் ஒடுக்கப்படுவது அறிந்து உணர்ந்த மறுகணமே தமிழுணர்வு பெறுவது இயல்பான ஒன்றுஇதே போல் பிற மொழியினத்தில் பிறந்த ஒருவன் இன்று தமிழுணர்வோடு இருந்தாலும் அவனோ அவனது வாரிசுகளோ தனது தாய்மொழி மீது பற்று கொள்வதும் அவர்களுடைய மொழியினத்தின் உரிமைகளுக்காக ஒன்றிணைந்து குரல் கொடுப்பதும் இயல்பான ஒன்றேபிறப்பால் யார் தமிழன் என்று பார்த்தால் சாதியை வைத்து அடையாளம் காண்பது எளிதுஆனால் மனித சமத்துவத்திற்கே சாதி எதிரானது எனபதால் சாதியை வைத்து யார் தமிழன் என்று வெளிப்படையாக வரையறுப்பது இழிவானது என்பதாலும் சாதி தமிழருள் உள்ள ஒற்றுமையைக் குலைக்கும் என்பதாலும் தமிழ் இனவுணர்வுள்ள அனைவரும் அதை தவிர்த்து வருகிறார்கள்.

யார் தமிழன் என்பதைப் பற்றிய குழப்பம் ஒருபுறம் இருக்க ‘திராவிடம்’ அல்லது ‘திராவிடன்’ என்பது குறித்தும் பெறும் குழப்பம் நம்மிடம் நிலவி வருவது சிக்கலை அதிகப்படுத்துகிறது.  பிற திராவிட மொழியினத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் மொழினத்தைச் சேர்ந்தவரையே தங்களை ஆள்பவர்களாகத் தேர்வு செய்யும்போது தமிழ்நாட்டில் மட்டும் திராவடன் எனும் போர்வையில் பிற மொழியினத்தவர் ஆள்கிறார்கள் எனும் ஆதங்கம் தமிழ் இன உணர்வாளர்களிடம் உண்டு.  உணர்ச்சிப் பெருக்கால் அதை எதிர்கொள்ளும் தமிழ் இன உணர்வாளர்கள் திராவிடம் என்பதே ஒரு பொய்யான சித்தாந்தம் என்று நிலைநாட்டும் அளவிற்கு சென்றுவிடுகிறார்கள்.  திராவிடன் என்பது மரபினம்.  இந்தியத் துணைகண்டத்தில் ஆரிய மரபினம் மற்றும் திராவிட மரபினம் ஆகிய இரு மரபினத்தைச் சேர்ந்த மக்கள்தான் பெருவாரியாக உள்ளனர் என்பது உலகம் ஒப்புக்கொண்ட உண்மை.  தமிழர்களாகிய நாம் தமிழன்தான் இந்தியா முழுவதும் பரந்து வாழ்ந்து வந்தான் என்றும் ஆரிய மொழி கலப்பினால் தமிழ் திரிந்து பிற திராவிட மொழகளாக உருமாறியது என்றும் நம்புகிறோம்.  அப்படியென்றால் பிற திராவிட மொழியினத்தைச் சார்ந்த அனைவரும் நமது உடன்பிறப்புகள்தான்.  பிற திராவிட மொழியின மக்கள் தங்கள் மொழியின அடையாளத்தோடு தங்களைத் தாங்களே ஆளும்போது தமிழ் மொழியன மக்கள் மட்டும் திராவிட மரபின அடையாளத்தைச் சுமந்து தங்களது அதிகாரத்தைப் பிறருக்கு பங்கிட்டு கொடுப்பதை ஏற்கமுடியாது என்று தமிழின உணர்வாளர்கள் கருதுகிறார்கள்.  ஆனால் அதற்காக திராவிடன் எனும் மரபின அடையாளத்தையே பொய் என்று பரப்ப முயல்வது உண்மைக்கு புறம்பானது என்பதால் பெரும்பாலான மக்களிடம் அது எடுபடாது.  திராவிடன் எனும் மரபின அடையாளத்திற்கு உட்பட்டதுதான் தமிழன் எனும் மொழியின அடையாளம்.  திராவிடன் எனும் மரபின அடையாளம் நம்மிடம் பழங்காலத்தில் இல்லை என்பது உண்மைதான்.  மரபினங்களைப் பற்றிய அறிவு புதியது என்பதால் திராவிடன் எனும் மரபின அடையாளமும் புதியதுதான்.  ஆனால் திராவிடத்திற்கு பொது எதிரியாக ஆரியம் இருப்பதால் அதை எதிர்பதற்கு திராவிடன் எனும் பொது மரபின அடையாளமும் நமக்கு தேவைப்படுகிறது.  அந்த பொது அடையாளத்தைப் பயன்படுத்தி பிற திராவிட மொழியினத்தவர் அதிகாரத்தை கைப்பற்றுகிறார்கள் என்றால் அதை அந்த அளவில் எதிர்த்தால் போதுமானது.  அதைப் பற்றிய விழிப்புணர்வை தமிழின மக்களிடம் ஏற்படுத்தினால் போதுமானது.  மாறாக திராவிடர் எனும் அடையாளத்தை சிதைப்பது மற்றும் அந்த அடையாளத்தை தாங்கி வருபவர்களை எதிரிகளாக சித்தரிப்பது தமிழுக்கு உண்மையான எதிரியான ஆரியத்திடம் தோற்பதற்கு வழிவகுக்கும்.

இது போன்ற சிக்கல்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டு அதற்கு ஒரு தீர்வாகவும் அதன் மூலம் தமிழரை (தமிழுணர்வு கொண்ட பிற மொழியினத்தவர் உட்பட) ஒன்றிணைக்கும் நோக்கத்துடன்  உருவாக்கப்பட்டதே தமிழ் நாட்சியம் எனும் இத்தொகுப்பு.

 

முகப்பு Home     பின் செல்