மூதாதையர்

முகப்பு Home      பின் செல்

ஒரு மனிதன் தன் முன்னோர்கள் கிளைத்தொடரில் ஒரு சில தலைமுறைகளையே அறிந்து வைத்திருப்பான். முன்னோர்கள் வரிசையில் பாட்டன், பூட்டன், ஓட்டன், உறவறுத்தான் என்று கூறுவார்கள். ஓட்டனுடைய தகப்பனை உறவறுத்தான் என்றுக் கூறக் காரணம் அவனைப்பற்றி நமக்கு அதிகம் தெரியாது. பெயர்கூட தெரிந்திருக்காது. உறவறுத்தான் மக்கள் வழி வாரிசுகள் என்று பார்த்தால் ஊரில் உள்ள பலபேர் உறவினராக இருப்பார்கள். அதனால் உறவறுத்தானுக்கு மேலுள்ள முன்னோர்கள் பொது முன்னோர்களாகக் கருதப்படுவார்கள். நாம் அறிந்திருக்கும் முன்னோர்கள் தொடர் தாண்டி சிலரை நாம் மூதாதையர்களாக அறிந்திருக்க கூடும். அவர்களில் சிலரை வழிபடுவும் செய்வார்கள்.

தாய் மண்ணில் எந்த இடையூரும் இல்லாமல் தொடர்ச்சியாக வாழும் மக்கள் தம் முன்னோர்களில் ஒருசில தலைமுறைகள்தான் அறிந்திருக்கக்கூடும் அல்லது நினைவில் வைத்திருக்கக்கூடும். ஆனால் வேற்றின மக்கள் கூட்டமாக குடிபெயர்ந்து மண்ணின் மக்களுடன் கலந்து வாழும்பொழுது, தங்களின் தனி அடையாளம் காக்க விரும்பும் குடிகள், தங்கள் அறியப்பட்ட முன்னோர்கள் வரிசை தாண்டி குடிப்பெயர்ச்சியின் வரலாற்றுக் காரணம் மற்றும் குடிப் பெயர்ந்த தங்களின் மூதாதையர்களின் குலம், மொழி, பண்பாடு, போன்ற அடையாளங்களை தங்களின் வழித்தோன்றல்களுக்கு தெரிவித்து அந்த தனி அடையாளத்தைக் காப்பதை ஒரு கடமையாக போதித்து தங்களது சந்ததிகளை வளர்க்கக்கூடும். அதனால் எத்தனை நூற்றாண்டு கடந்தாலும், அவர்களுக்கு தங்கள் மொழியே மறந்திருந்தாலும், அவர்கள் தங்கள் மொழி அடையாளத்தை தாங்கி நிற்பர். தங்கள் மூதாதையர்கள் இன்ன மொழியினத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் தான் இன்ன மொழியினத்தைச் சார்ந்தவன் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு தனது முழு விசுவாசத்தையும் அந்த மொழிக்கும் அந்த மொழியின மக்களின் வரலாற்றுப் பெருமைகளுக்குமே காட்டுவர்.  தமிழகத்தில் குடிபெயர்ந்த பிற மொழியினத்தவருக்கும் மட்டுமல்லாமல் குடிபெயர்ந்த தமிழனுக்கும் இது பொருந்தும். இது இயல்பான ஒரு சமூக நகழ்வுதான்.

தென்னாப்பிரிக்காவிலோ, தென்கிழக்காசியாவிலோ சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் குடிபெயர்ந்த தமிழன்மார் தங்கள் முன்னோர்கள் வரிசைப்படி தமிழகத்திலுள்ள தமிழனுடன் தொடர்புபடுத்த முடியாமல் போயிருக்கலாம். ஆனால் தங்கள் மூதாதையர்கள் தமிழன்மார் என்பதை அறிந்திருக்கிறார்கள்.

 

பின் செல்